என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![விஜயகாந்த் நினைவிடத்தில் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த அனுமதி: பிரேமலதா விஜயகாந்த் விஜயகாந்த் நினைவிடத்தில் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த அனுமதி: பிரேமலதா விஜயகாந்த்](https://media.maalaimalar.com/h-upload/2023/12/30/1998456-premalatha4.webp)
விஜயகாந்த் நினைவிடத்தில் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த அனுமதி: பிரேமலதா விஜயகாந்த்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படும்.
- விஜயகாந்த் விட்டுச்சென்ற பணிகள் நிறைய உள்ளது, அதனை தொடர்வோம்.
சென்னை:
மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் தொண்டர்கள் வழிபடும் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் நினைவிடத்தில் அணையா தீபம் ஏற்றி வைக்கப்படும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர் இன்று மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா கூறுகையில்,
* விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படும். தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* பொது இடத்தில் மணிமண்டபம், சிலை வைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
* விஜயகாந்த் லட்சியத்தை நிறைவேற்ற பாடுபடுவோம்.
* விஜயகாந்த் விட்டுச்சென்ற பணிகள் நிறைய உள்ளது, அதனை தொடர்வோம் என்று கூறினார்.