search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை சென்ட்ரல்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் திருவள்ளூர் நிலையத்தில் நின்று செல்லும்: ரெயில்வே அறிவிப்பு
    X

    சென்னை சென்ட்ரல்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் திருவள்ளூர் நிலையத்தில் நின்று செல்லும்: ரெயில்வே அறிவிப்பு

    • திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் 6 பிளாட்பாரங்கள் இருப்பதால் கால தாமதம் ஏற்படாது
    • சென்னை கோட்ட அதிகாரிகள் ரெயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்தனர்.

    சென்னை சென்ட்ரல்-பெங்களூரு இடையே அதிவேக வந்தேபாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு செல்லும் இந்த ரெயில் காட்பாடியில் மட்டுமே நிற்கும். வேறு எந்த நிலையத்திலும் நிற்காது.

    இந்த நிலையில் வந்தே பாரத் ரெயிலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும் என்று கோட்ட ரெயில் பயணிகள் நல உறுப்பினரும் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவருமான ஜெயபால்ராஜ் கோரிக்கை வைத்தார்.

    தொழிற்சாலைகள் மிகுந்த ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூரில் இருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளதாக சமீபத்தில் வெளிவந்த பொருளாதார ஆய்வு தெரிவிக்கின்றது.

    இந்த ரெயில் நிலையத்தில் 6 பிளாட்பாரங்கள் இருப்பதால் வந்தே பாரத் ரெயிலை 4 நிமிடங்கள் நிறுத்தி எடுப்பதால் கால தாமதம் ஏற்படாது. இந்த ரெயிலை நிறுத்துவதன் மூலம் வர்த்தக பிரமுகர்கள், ஊழியர்கள் மற்றும் புறநகர் மின்சார ரெயில் பயணிகள் பயன் அடைவார்கள் என்று வலியுறுத்தினார்.

    அதன் அடிப்படையில் சென்னை கோட்ட அதிகாரிகள் ரெயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்தனர். அதனை ஏற்று வந்தே பாரத் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது.

    Next Story
    ×