என் மலர்
தமிழ்நாடு

ராஜபாளையம் அருகே வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது: தண்ணீரில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

- கண்மாயிலிருந்து வெளியேறும் நீர் செல்ல வழி இல்லாமல் ஓடையில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
- வாகைக்குளம்பட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம், சத்திரப்பட்டி, வாகைகுளம் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று இரண்டாவது நாளாக அடை மழை பெய்து வரும் நிலையில் கண்மாயிலிருந்து வெளியேறும் நீர் செல்ல வழி இல்லாமல் ஓடையில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
வாகைக்குளம்பட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சங்கிலியூர் என்ற 80 வயது மூதாட்டி வீட்டில் திடீரென மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததால் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அதே பகுதியில் 2 வீடுகளும் இடிந்து சேதமடைந்தது. சேதமடைந்த வீடுகளுக்கும், மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.