என் மலர்
தமிழ்நாடு

X
குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய 5 ரூபாய் நாணயம் அகற்றம்
By
மாலை மலர்25 July 2023 9:02 AM IST

- 5 வயது குழந்தை தனது கையில் கிடைத்த 5 ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி விட்டாள்.
- குழந்தையின் பெற்றோர் உடனடியாக பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.
ஊத்துக்குளி:
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், பல்லகவுண்டம்பாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது குழந்தை தனது கையில் கிடைத்த 5 ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி விட்டாள். நாணயம் தொண்டையில் சிக்கிக் கொண்டதால் அந்தக் குழந்தை தொண்டையைப் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டு அழுதாள்.
குழந்தையின் பெற்றோர் உடனடியாக பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் உணவுக்குழாயில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருப்பது தெரிய வந்தது.
அதனைத்தொடர்ந்து குடல் இரைப்பை அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் கொண்ட குழுவினர் எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் நாணயத்தை வெளியே எடுத்தனர். அவர்களுக்கு பெற்றோர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
Next Story
×
X