search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்
    X

    காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்

    • கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    இதையடுத்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருவள்ளூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பெரும்பாலான பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.

    இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை அளவு குறைவாக உள்ளதால் கல்வி நிலையங்கள் இன்று வழக்கம்போல் செயல்படும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.

    Next Story
    ×