என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு](https://media.maalaimalar.com/h-upload/2022/06/16/1713270-kanyakumaribeach.jpg)
X
கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு
By
Suresh K Jangir16 Jun 2022 12:34 PM IST
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- கன்னியாகுமரியில் அவ்வப்போது கடல் நீர் மட்டம் தாழ்வதும், உயர்வதுமாக இருந்து வருகிறது.
- இன்றும் கடல் நீர் உள்வாங்கியதால் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் கடந்த சில நாட்களாக மாற்றங்களை சந்தித்து வருகிறது. அவ்வப்போது கடல் நீர் மட்டம் தாழ்வதும், உயர்வதுமாக இருந்து வருகிறது.
பவுர்ணமி முடிந்த நிலையில் நேற்று காலை கடல் நீர்மட்டம் திடீரென்று உள்வாங்கியது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) 2-வது நாளாக கடல் நீர் மட்டத்தில் மாற்றம் தொடர்ந்தது. இன்றும் கடல் நீர் உள்வாங்கியதால் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் படகு குழாம் முன்பு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து 2 மணி நேரம் தாமதத்திற்கு பின்பு படகு போக்குவரத்து தொடங்கியது.
Next Story
×
X