என் மலர்
தமிழ்நாடு

வீரலட்சுமி குறித்து கேள்வி கேட்டதும், ஆவேசம் அடைந்த சீமான்

- குருவி வெடி, லெட்சுமி வெடி போன்று இரண்டு வெடிகளை வைத்து மலையை தகர்க்கலாம்
- வீரலட்சுமி என்பது யார்? என்மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை காவல்துறையும் கேட்கவில்லை, பத்திரிகையாளர்களும் கேட்கவில்லை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு அளித்திருந்த புகார் அடிப்படையிலான வழக்கு, தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்து, நேருக்குநேராக விசாரணை நடத்த வேண்டும். அப்படி என்றால் விசாரணைக்கு தயார் என்று சீமான் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே, வீரலட்சுமி என்பவர் சீமான் மனைவி கயல்விழி மற்றும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்திருந்த தேன்மொழி ஆகியோரும் விசாரணைக்கு வர வேண்டும் என வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு விஜயலட்சுமி எதிர்ப்பு வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் சீமான் இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குருவி வெடி, லெட்சுமி வெடி போன்று இரண்டு வெடிகளை வைத்து மலையை தகர்க்கலாம் என நினைக்கிறார்கள். தற்போது இரண்டு முறை சம்மன் அனுப்பிய காவல்துறை அப்போது என்ன செய்தது? எல்லா வினைகளுக்கும் எதிர்வினை உண்டு.
வீரலட்சுமி என்பது யார்? என்மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை காவல்துறையும் கேட்கவில்லை, பத்திரிகையாளர்களும் கேட்கவில்லை. ஜூனியர் நடிகைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து செட்டில்மென்ட் செய்ததாக கூறியுள்ளார். அந்த ஜூனியர் நடிகை யார் தெரியுமா? வீரலட்சுமிதான்.
என்னை ஒருமையில் பேசுகிறார்கள். ஜனநாயகவாதியாக இருப்பதுதான் எனக்கு பிரச்சனை. எனக்கு வேறு ஒரு முகம் இருக்கும். இந்த முகத்தையே பார்க்க முடியவில்லையே. அப்போது வேறு முகத்தை?
அதிகாரத்தில் இருப்பது யார்? வீரலட்சுமியை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது யார்?. எப்போது வந்தாலும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். ஊடகங்களை சந்திக்கலாம். சீமானை பற்றி பேசினால்...
சீமான் பானிபூரி விற்கிறவன் மாதிரி... நான் யார் தெரியுமா? நான் ஒரு லட்சம் துப்பாக்கிகளை கடந்த என் தலைவனை பார்த்து வந்தவன்.
எனக்கு உயிரும் என்றுதான், ...ம் ஒன்றுதான்.... எதற்கும் பயப்படமாட்டேன். ஜெயில்ல போடுவீர்கள். அப்புறம் வெளியில் விடுவீர்கள்தானே? அப்போது உங்களை விட்டுவிடுவேனா என்ன...
வீரலட்சுமி, விஜயலட்சுமி என இரண்டு லட்சுமியை ஏன் அனுப்பி கொண்டிருக்கிறீர்கள். எனது பிறப்பிலும், ரத்தத்திலும் வீரம் இருக்கிறது. நான் தலைவராக ஏற்றுக் கொண்டவர் வீரமே உருவமாக இருந்தவர். அவரது மகன் நான்... எனக்கு வீரமெல்லாம் இருக்கு. வேணாம். இருண்டு லட்சுமியையும் திரும்பப்பெறு.
என்னிடம் இல்லாதது பணம்தான். இரண்டு தனலட்சுமி, தான்யலட்சுமியை கொடு. 10 தனலட்சுமி, 10 தான்யலட்சுமியை அனுப்பி. சமாளிக்கிறேன்.
அவதூறால் அழிந்து போகிறவனா நானு....
நான் கேடுகெட்ட ரவுடிப்பையன். ஸ்கெட்ச் போட்டு தூக்குவேன் என்கிறார்கள். இந்த பேனாவை தூக்க முடியுமா?. சிரிக்க சிரிக்க பேசுபவன் என்று நினைக்க வேண்டாம்... நான் ரொம்ப சீரியஸான ஆள். கட்சியாவது? ...ஆவது என வெட்டி எறிந்து போய்க்கொண்டே இருப்பேன்.
பெண்களுக்கு எதிராக அநீதி நடந்தபோது எங்கே போனார்கள். நாங்கள்தானே போராடினோம்.