search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு- 16ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
    X

    தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு- 16ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

    • ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படுகிறது
    • 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கு வழங்கப்படுகிறது

    சென்னை:

    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஜனவரி 16ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு காலை 8.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் விருதுகள் வழங்குகிறார்.

    விருது பெறுவோர்:

    திருவள்ளுவர் விருது - இரணியன் நா.கு.பொன்னுசாமி

    பேரறிஞர் அண்ணா விருது - உபயதுல்லா

    பெருந்தலைவர் காமராசர் விருது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

    மகாகவி பாரதியார் விருது - டாக்டர் இ.ரா.வேங்கடாசலபதி

    பாவேந்தர் பாரதிதாசன் விருது - வாலாஜா வல்லவன்

    திரு.வி.க விருது - நாமக்கல் பொ.வேல்சாமி

    கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - கவிஞர் மு.மேத்தா

    பெரியார் விருது - கவிஞர் கலி.பூங்குன்றன்

    அண்ணல் அம்பேத்கர் விருது - எஸ்.வி.ராஜதுரை

    தேவநேயப் பாவாணர் விருது - முனைவர் இரா. மதிவாணன்.

    இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×