search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேலூரில் அமித்ஷா வருகையொட்டி 1,200 போலீசார் பாதுகாப்பு
    X

    கந்தனேரி பகுதியில் பாதுகாப்பு குறித்து டி.ஐ.ஜி. முத்துசாமி, சி.ஆர்.பி.எப். கமாண்டோ அசோக்குமார் ஆய்வு செய்த காட்சி.

    வேலூரில் அமித்ஷா வருகையொட்டி 1,200 போலீசார் பாதுகாப்பு

    • அமித்ஷா சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார்.
    • 1,200 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு காலம் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாளை மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இதில் மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய போக்குவரத்து துறை மந்திரி வி.கே. சிங் மற்றும் மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். இதற்கான முன்னேற்பாடு பாதுகாப்பு பணிகளை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் மத்திய சி.ஆர்.பி.எப். கமாண்டோ அசோக்குமார் ஆகியோர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனையொட்டி 1,200 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் உள்துறை மந்திரி வருவதையொட்டி அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    அமித்ஷா சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து காரில் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்.

    வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×