search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆம்பூர் பச்சகுப்பம் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் பாலாற்று வெள்ளம்- 40 கிராம மக்கள் தவிப்பு
    X

    ஆபத்தை உணராமல் பச்சகுப்பம் தரைப்பாலத்தை கடக்கும் பொதுமக்கள்.


    ஆம்பூர் பச்சகுப்பம் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் பாலாற்று வெள்ளம்- 40 கிராம மக்கள் தவிப்பு

    • தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • ஆம்பூர் பச்ச குப்பம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது.

    ஆம்பூர்:

    தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதேபோல் கடந்த வாரம் முதல் திருப்பத்தூர், வாணியம்பாடி, அம்பலூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதனால் திருப்பத்தூர் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் அங்கிருந்த குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் வீட்டிலிருந்து அவர்கள் வெளியே செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    ஆந்திராவில் பெய்த தொடர் மழையால் வாணியம்பாடி அருகே தமிழக எல்லையை ஒட்டியுள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி பாலாற்று வெள்ளம் கரை புரண்டு வந்தது.

    மேலும் திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் பாலாற்றில் கலக்கிறது.

    இதனால் நேற்று முதல் ஆம்பூர் பச்ச குப்பம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. பச்சகுப்பம் பாலாற்று பாலம் வழியாக குடியாத்தம், பேரணாம்பட்டு, மேல்பட்டி மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வந்தனர்.

    தரைப்பாலத்தை மழை வெள்ளம் சூழ்ந்ததால் உமராபாத், பேரணாம்பட்டு வழியாக 2 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 40 கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். சிலர் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் பச்ச குப்பம் பாலாற்றுக்கு செல்லும் பாதையில் ஆம்பூர் தாலுகா போலீசார் தடுப்புகளை அமைத்து இந்த வழியாக வரும் வாகனங்களை வேறு வழியில் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பாலாற்றில் நீர் வற்றாமல் சென்று கொண்டு உள்ளதால் தற்போது பாலாறுவற்றாத ஜீவநதியாக மாறி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    பச்சை குப்பம் பாலாற்றில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×