என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![கனமழை எதிரொலி- 8 விமான சேவைகள் ரத்து கனமழை எதிரொலி- 8 விமான சேவைகள் ரத்து](https://media.maalaimalar.com/h-upload/2022/11/13/1791044-plane.jpg)
X
கனமழை எதிரொலி- 8 விமான சேவைகள் ரத்து
By
மாலை மலர்13 Nov 2022 8:44 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மதுரை, ஐதராபாத், கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததை அடுத்து, தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ஐதராபாத், கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது.
Next Story
×
X