என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![திருமாவளவன் பிறந்த நாள்: தொலைபேசியில் வாழ்த்து கூறிய விஜய் திருமாவளவன் பிறந்த நாள்: தொலைபேசியில் வாழ்த்து கூறிய விஜய்](https://media.maalaimalar.com/h-upload/2023/08/17/1933954-vijau-thirumavalavan.webp)
X
திருமாவளவன் பிறந்த நாள்: தொலைபேசியில் வாழ்த்து கூறிய விஜய்
By
மாலை மலர்17 Aug 2023 9:45 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- திருமாவளவன் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் வாழ்த்து.
- வாழ்த்து கூறிய நடிகர் விஜய்-க்கு திருமாவளவன் டுவீட் மூலம் பதில்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (ஆகஸ்ட் 17) தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வி.கே. சசிகலா மற்றும் பல்வேறு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில், திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், திருமாவளவனுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதற்கு திருமாவளவன் தனது X (முன்பு டுவிட்டர்) பதிவில் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் கூறி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
Next Story
×
X