என் மலர்
தமிழ்நாடு
அனைவரின் அன்புக்கும் உரித்தான விஜயகாந்த்... விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.... அண்ணாமலை
- இன்னும் 14 நாட்கள் விஜயகாந்துக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது.
- விஜயகாந்த் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
— K.Annamalai (@annamalai_k) November 29, 2023
அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று, மக்கள் பணி தொடர, எல்லாம்…
அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.