என் மலர்
தமிழ்நாடு
நாங்களும் கொளுத்துவோம்.. அ.தி.மு.க. விலகலை கொண்டாடிய பா.ஜ.க.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியது.
- அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையேயான கூட்டணி முறிந்தது.
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கூட்டணி முறிவு குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக அ.தி.மு.க. அறிவித்தது.
பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிந்ததை கொண்டாடும் வகையில், அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் சமூக வலைதளங்களில் #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்கள் யாரும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க.-வை போன்றே தமிழக பா.ஜ.க.வினரும் அ.தி.மு.க. விலகலை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது தொடர்பாக தமிழக தலைவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும், பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் பா.ஜ.க. மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.