என் மலர்
தமிழ்நாடு

X
பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது
By
மாலை மலர்2 May 2023 2:01 PM IST

- சென்னை ஓட்டேரி பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் இன்று காலை பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
- பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பூர்:
சென்னை ஓட்டேரி பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் இன்று காலை பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தில் யாரும் இல்லாத நிலையில் இன்று காலையில் பெய்த மழையால் கட்டிடம் இடிந்து சரிந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கட்டிடத்தின் அருகில் யாரும் செல்லாத படி பார்த்துக்கொண்டனர். பின்னர் பாதியில் நின்ற கட்டிடத்தை முழுமையாக இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த கட்டிடத்தின் உரிமையாளரிடம் கடந்த 3 மாதத்துக்கு முன்பே மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதில் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் உடனடியாக இடித்து விடுமாறு குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.
Next Story
×
X