search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆத்தூரில் வீடுகளை வெள்ளம் சூழ்வதால் மழை நீர் கால்வாய் அமைக்க வேண்டும்- கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை
    X

    ஆத்தூரில் வீடுகளை வெள்ளம் சூழ்வதால் மழை நீர் கால்வாய் அமைக்க வேண்டும்- கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை

    • காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது ஆத்தூர் முதல் நிலை ஊராட்சி.
    • மக்கள் குடியிருக்கின்ற பகுதியில் மழைநீர் தேங்காதவாறு மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது ஆத்தூர் முதல் நிலை ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஆத்தூர் வடபாதி, தென்பாதி மற்றும் வடகால் ஆகிய கிராமங்கள் உள்ளன.

    ஆத்தூர் ஊராட்சியில் உள்ள வடகால் கிராமம் கடுமையான மழை காலங்களில் கிராமத்தை சுற்றி தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆத்தூர் வட பாதிக்கும் வடகாலுக்கும் இடையே ரூ. 60 லட்சம் செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன் பாட்டில் இருந்து வருகிறது.

    வடகால் கிராமத்தில் இருந்து விவசாய பொருட்கள் டிராக்டர் மற்றும் வாகனங்களில் செல்வதால் ஆத்தூர் வடபாதி சாலையை நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதனால் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே செல்லுகின்ற சாலை குண்டும் குழியுமாக மாறி மழைநீர் பள்ளத்தில் தேங்கி நிற்கிறது.

    இவ்வழியாக இரண்டு சக்கர வாகனங்களில் கடந்து செல்பவர்களும் மற்றும் நடந்து செல்பவர்களும் தடுமாறி கீழேவிழுந்து விபத்துகள் ஏற்படுகிறது. எனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆத்தூர் ஊராட்சியில் உள்ள வடபாதிவழியாக வடகால் செல்லும் சாலை மற்றும் அம்பேத்கர் நகர், சாய் கோல்டன் சிட்டி, மெஜஸ்டிக் அவின்யூ ஆகிய மக்கள் குடியிருக்கின்ற பகுதியில் மழைநீர் தேங்காதவாறு மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×