என் மலர்
தமிழ்நாடு
அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு
- கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- பட்டாசுகள் வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தீபாவளி தினத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர தடை செய்யப்பட்ட, ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி சென்னையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நேற்றிரவு முதல் தற்போது வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க சென்னை காவல் துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.