என் மலர்
தமிழ்நாடு

10 ஆண்டுகளில் அதிமுக செய்யாததை ஒரே ஆண்டில் செய்து சாதித்துள்ளோம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

- சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
- வடசென்னையில் மழைநீர்தேங்கிய இடங்களில் உடனுக்குடன் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது.
சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை அலுவலத்தில் அவசர கால செயல்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் 24 மணி நேரமும் ஊழியர்கள் மழை தொடர்பாக கண்காணித்து வருகிறார்கள். இந்த கட்டுப்பாட்டு அறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மழை பாதிப்பு குறித்தும் மழை தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் ஏரிகளில் உள்ள நீர் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சென்று இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
தமிழகத்தை 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக சீரழித்துவிட்டது. அதிமுக சீரழித்ததை சரி செய்ய பல ஆண்டுகளாகும். ஆனால் திமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
வடசென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் உடனுக்குடன் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளில் செய்யாததை ஒரே ஆண்டில் செய்து சாதித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.