search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என்ஜின் பழுதால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களின் படகை சரிசெய்த கடலோர காவல்படை வீரர்கள்
    X

    என்ஜின் பழுதால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களின் படகை சரிசெய்த கடலோர காவல்படை வீரர்கள்

    • விசைப்படகை இயக்கியபோது திடீரென என்ஜினில் பழுது ஏற்பட்டது.
    • கடலோர காவல்படையில் இருந்த சில வீரர்கள் மீனவர்களின் படகில் ஏறி என்ஜின் பழுதை சரி செய்தனர்.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் ஒரு விசைப்படகில் நேற்று இரவு மீன் பிடிக்க சென்றனர். ராமேசுவரத்தில் இருந்து 5 நாட்டிகல் கடல் தொலைவில் மீனவர்கள் வலைகளை விரித்து மீன் பிடித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கரைக்கு புறப்பட ஆயத்தமானார்கள்.

    இதற்காக விசைப்படகை இயக்கியபோது திடீரென என்ஜினில் பழுது ஏற்பட்டது. உடனே மீனவர்கள் அதனை சரி செய்ய முயன்றனர். ஆனால் எந்த பலனுமில்லை. இதனால் மீனவர்கள் செய்வதறியாது தவித்தனர். பல மணிநேரம் நடுக்கடலில் மீனவர்கள் படகுடன் தத்தளித்தனர். மற்ற மீனவர்களும் அந்த பகுதியில் வரவில்லை.

    இந்த நிலையில் இந்திய கடலோர காவல்படையினர் அந்த பகுதியில் ரோந்து வந்தனர். தனியாக தத்தளித்து கொண்டிருந்த படகை பார்த்த கடலோர காவல்படையினர் படகின் அருகில் சென்று மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நடந்த விவரத்தை கூறினர். இதையடுத்து கடலோர காவல்படையில் இருந்த சில வீரர்கள் மீனவர்களின் படகில் ஏறி என்ஜின் பழுதை சரி செய்தனர்.

    இதையடுத்து மீனவர்களின் விசைப்படகு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. முன்னதாக கடலோர காவல்படையினருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×