என் மலர்
தமிழ்நாடு

முன்னாள் எம்.எல்.ஏ. கு.க. செல்வம் காலமானார்

- 2016ல் சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட கு.க.செல்வம் திமுகவில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார்.
- கு.க. செல்வம் தி.மு.க. தலைமை நிலைய அலுவலக செயலாளராக இருந்தார்.
சென்னை:
தி.மு.க. தலைமை நிலைய அலுவலக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கு.க. செல்வம் சென்னையில் இன்று காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலையில் கு.க.செல்வம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70.
இவர் 1997-ல் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்தார். அதன் பிறகு 2016-ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். அப்போது முதல் தி.மு.க. தலைமையிடத்தில் அதிக நெருக்கம் வைத்திருந்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., தி.நகர் ஜெ.அன்பழகன் மறைந்தபோது தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் பதவி கிடைக்காததால் 2020-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
அதன்பிறகு மீண்டும் 2022-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு தி.மு.க.வில் தலைமை நிலைய அலுவலக செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அப்போது முதல் அண்ணா அறிவாலயத்தில் பணியாற்றி வந்தார்.
அவரது மறைவை கேள்விப்பட்டதும் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட அறிவாலய நிர்வாகிகள் அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.