என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![மீஞ்சூர் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம் மீஞ்சூர் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/12/1879970-traind.webp)
மீஞ்சூர் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம்
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே செல்லும் போது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் ரெயிலை டிரைவர் நடுவழியில் நிறுத்தினார்.
- கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
பொன்னேரி:
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 4 மணியளவில் பொன்னேரி ரெயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டு இருந்தது.
மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே செல்லும் போது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் ரெயிலை டிரைவர் நடுவழியில் நிறுத்தினார். தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து பழுதை சரிசெய்ய ஆய்வு செய்தனர்.
எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் பின்னால் வந்த மற்ற ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நீண்ட நேரத்துக்கு பின்னர் எக்ஸ்பிரஸ் ரெயிலை அதிகாரிகள் ஆய்வு செய்து குறைந்த வேகத்தில் மீஞ்சூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினர்.
இதனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ரெயில்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் காலை 7.30 மணிக்கு பின்னரே எக்ஸ்பிரஸ் ரெயிலில் பழுது சரிபார்க்கப்பட்டு மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.
காலை நேரத்தில் சென்னைக்கு செல்லும் புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் அலுவலகம் செல்வோர் மற்றும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 4 வழிப்பாதை பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.