என் மலர்
தமிழ்நாடு

மிகவும் அவசியமின்றி வெளியே வராதீர்கள்... கவர்னர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்

- அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுரைகளை தயவுசெய்து கடைபிடிக்கவும்.
- மத்திய, மாநில துறைகள் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில்,
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். மிகவும் அவசியமில்லாவிட்டால் வெளியே வர வேண்டாம்
அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுரைகளை தயவுசெய்து கடைபிடிக்கவும். மத்திய, மாநில துறைகள் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
விரைவில் நிலைமை சீரடைய எனது பிரார்த்தனைகள் என கூறியுள்ளார்.
Our brothers and sisters in Thoothukudi, Tirunelveli, Tenkasi and Kanniyakumari districts are facing immense difficulties and life severely affected by torrential rain and flooding. At this difficult time please stay home and do not come out unless absolutely necessary. Please…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 18, 2023