என் மலர்
தமிழ்நாடு
3 மாவட்ட மக்களே உஷார்... வெளுத்து வாங்கப்போகும் கனமழை
- திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
- நாளை மற்றும் 13, 16-ந்தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும்.
தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாட்டில் இன்று மற்றும் 14, 15 ஆகிய நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை மற்றும் 13, 16-ந்தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.