என் மலர்
தமிழ்நாடு

அறுவை சிகிச்சையில் அலட்சியம்- தூத்துக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு நோட்டீஸ்
- கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியமாக செயல்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் மீது வழக்கு.
- தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு நோட்டீஸ்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மனுதாரர், தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டோம் என்றும், அறுவை சிகிச்சை செய்த பின்னரும், 5.8.2019ல் கருவுற்றதாகவும், 26.2.2020ல் பெண் குழந்தை பிறந்தது என்றும் இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியமாக செயல்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.