என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![தமிழகத்தில் 6ம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 6ம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/02/1785278-rain123.jpg)
தமிழகத்தில் 6ம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நேற்று மற்றும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்தது. மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன் எதிரொலியால், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நேற்று மற்றும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 6ம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மஞ்சள் அலர்ட்டாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.