என் மலர்
தமிழ்நாடு
கள்ளச்சாராய விற்பனை தடுப்பு நடவடிக்கை - அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை நடப்பது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
- கள்ளக்குறிச்சிக்கு முன்னதாகவும் சாராய பலிகள் நிகழ்ந்துள்ளது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சென்னை:
கள்ளக்குறிச்சி மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒருவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான விசாரணையை, சி.பி.ஐ.-க்கு மாற்ற வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்கு கடந்த ஓராண்டாக செய்தது என்ன? கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை நடப்பது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. கள்ளச்சாராய விற்பனையை தடுக்கும் வகையில் ஓராண்டாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பலி. இதற்கு யார் பொறுப்பு? கள்ளக்குறிச்சிக்கு முன்னதாகவும் சாராய பலிகள் நிகழ்ந்துள்ளது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் விழுப்புரம், மரக்காணம் சம்பவத்திற்கு பிறகு கள்ளச்சாராய விற்பனை தடுப்பு நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.