search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை
    X

    தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை

    • ஈரோடு மாவட்டத்தில் தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • கார் மற்றும் பஸ்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    கர்நாடக மாநிலம் மங்களூரில் குக்கர் குண்டு வெடித்ததையடுத்து கர்நாடக எல்லையில் அமைந்து உள்ள ஈரோடு மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகிறது. கார் மற்றும் பஸ்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கார் மற்றும் பஸ் பயணிகளிடம் என்ன காரணத்துக்காக தமிழகத்துக்கு வருகிறீர்கள் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    லாரி மற்றும் சரக்கு வாகனங்களையும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். டிரைவர்கள் பெயர் விபரம் குறித்து கேட்டறிந்தனர்.

    இதே போல் கொடுமுடி நொய்யல் சோதனை சாவடி, தாளவாடி சோதனை சாவடி, பண்ணாரி சோதனை சாவடி, கருங்கல்பாளையம் சோதனை சாவடி, விஜயமங்கலம், பர்கூர், லட்சுமி நகர் சோதனை சாவடிகளிலும் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை நடத்தினர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.

    மேலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாவட்டம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் சிப்டு முறையில் வாகன சோதனை செய்யவும், பாதுகாப்பு பணி மேற்கொள்ளவும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார்.

    Next Story
    ×