search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேலூரில் பிரதமர் மோடி பிரசாரம்- குஷ்பு தகவல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வேலூரில் பிரதமர் மோடி பிரசாரம்- குஷ்பு தகவல்

    • அருணாச்சல பிரதேசத்தில் பல நிறுவனங்களில் சீன மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • நாட்டில் நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரசின் தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தான்.

    வேலூர்:

    வேலூரில் இன்று நடிகை குஷ்பு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது தி.மு.க.வும் காங்கிரசும் தான். தற்போது இலங்கை துறைமுகத்தில் சீனாவுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது.

    இந்த சூழ்நிலைக்கு காங்கிரசும் தி.மு.க.வும் தான் காரணம். ஆனால் தேர்தலுக்காக மறைத்து நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

    அருணாச்சல பிரதேசத்தில் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளதாக தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். உண்மைக்கு புறம்பான தகவல்களை அவர்கள் பரப்பி வருகின்றனர்.

    அருணாச்சல பிரதேசத்தில் பல நிறுவனங்களில் சீன மக்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே அவர்களுக்கு புரியும் வகையில் சீனா மொழியில் பெயர் பலகை வைத்துள்ளனர். இது ஆக்கிரமிப்பு என்று கூற முடியாது.

    உத்தர பிரதேசம் பீகாருக்கு அதிக நிதி வழங்குவதாக கூறுகின்றனர். ஆனால் தமிழகத்திற்கும் ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் மக்களுக்கு என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்க வேண்டும்.

    நாட்டில் நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரசின் தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தான்.

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் இந்த தேர்வினை யாராலும் நீக்க முடியாது. இதனை காங்கிரஸ் சிதம்பரத்தின் மனைவி வக்கீல் நளினி சிதம்பரமே கோர்ட்டு முன்பு தெரிவித்துவிட்டார்.

    தற்போது தேர்தலை ஒட்டி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தி.மு.க.வும், மாநில அரசு விரும்பினால் அதிலிருந்து விலக்கு அளித்துக் கொள்ளலாம் என்று காங்கிரசும் தெரிவித்து இருப்பது மக்களை ஏமாற்றும் பிரசாரம். இதனை மக்கள் நம்பமாட்டார்கள். பா.ஜ.க. மேல் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.

    பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகிற 10-ந்தேதி வேலூருக்கு பிரசாரம் செய்ய வருகிறார்.

    காலை 10.30 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×