என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![ஜெயக்குமார் மரண வழக்கில் விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்: கே.வி. தங்கபாலு ஜெயக்குமார் மரண வழக்கில் விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்: கே.வி. தங்கபாலு](https://media.maalaimalar.com/h-upload/2024/05/07/2169232-kvthangabalu.webp)
ஜெயக்குமார் மரண வழக்கில் விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்: கே.வி. தங்கபாலு
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிவோம்.
- எனது அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் பணம் வாங்கியதும் கிடையாது. வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது என்றார்.
தூத்துக்குடி:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.வி. தங்கபாலு இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக காவல்துறையினர் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதற்காக வந்துள்ளேன். இப்போது இந்த வழக்கு தொடர்பாக எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
நண்பர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர். அவருடைய மரணம் கொலை அல்லது தற்கொலை எதுவாக இருந்தாலும் அது வருத்தத்திற்குரியது. அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயல் நடந்திருக்கக்கூடாது. இதைபற்றிய முழுமையான தகவல்களை காவல்துறை முழுமையாக விசாரித்து வருவதாக அறிகிறேன்.
தமிழக காவல்துறை மிக சிறந்த முறையில் பணியாற்றக் கூடியது. நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிவோம். அவர்கள் உரிய முறையில் விசாரணை செய்வார்கள் என்று நாம் நம்புவோம்.
விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்பட வேண்டும். உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று கடிதத்தில் இருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், எனது அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் பணம் வாங்கியதும் கிடையாது. வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது என்றார்.