search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை நீர்மட்டம் 54,69 அடியாக குறைந்தது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 54,69 அடியாக குறைந்தது

    • அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்னும் சில நாட்களில் 50 அடிக்கு கீழே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் திறப்பது அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    மேலும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யவில்லை. இதனால் இந்தாண்டு போதிய அளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் இந்தாண்டு அதிகளவில் குறைந்து விட்டது.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தண்ணீர் முழுமையாக மேட்டூர் அணையை வந்தடையவில்லை. அதிகபட்சமாக 5 ஆயிரம் கனஅடி மட்டுமே மேட்டூர் அணைக்கு வந்தது. இந்த நிலையில் படிபடியாக அதுவும் குறைந்து விட்டது.

    இதன் காரணமாக மேட்டூர் அணை குட்டை போல் மாறியது. மேலும் அணையின் நீர்தேக்க பகுதிகள் மற்றும் 16 கண் பாலம் பகுதி ஆகியவை பாளம், பாளமாக வெடித்து வறண்டு காணப்படுகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 54.69 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 415 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்னும் சில நாட்களில் 50 அடிக்கு கீழே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×