என் மலர்
தமிழ்நாடு
பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா? அமைச்சர் பதில்
- தேர்வுக்கான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
சென்னை:
தமிழகத்தில் மார்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ந்தேதி வரை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 1-ந்தேதி தொடங்கி மார்ச் 22-ந்தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறுகிறது. பொதுத்தேர்வு முடிவுகள் முறையே மே மாதம் 10, 14, 6-ந்தேதிகளில் வெளியிடப்படுகிறது.
இதனிடையே பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் ஏற்படுமா? என கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கூறியதாவது:-
10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை. தேர்வுக்கான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போலத்தான் பாராளுமன்ற தேர்தல் தேதி இருக்கும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஊக்கத்தொகை உரிய நேரத்தில் கிடைக்காததால் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்.