என் மலர்
தமிழ்நாடு
8 அடி உயர கருணாநிதி சிலை... காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- கருணாநிதி நூற்றாண்டு விழா, திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது.
- சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் 8 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி:
கருணாநிதி நூற்றாண்டு விழா, திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் இதுவரை 75 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 76-வது நிகழ்ச்சியாக, கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்று உள்ளது.
சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் 8 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
சிலையினை காணொலி காட்சி மூலமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு, தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன் முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன், துணை மேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.