search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகள்
    X

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகள்

    • செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருக்கும்.
    • ரெயில் நிலைய படிக்கட்டுகளிலும், நடைமேடைகளிலும் குரங்குகள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    செங்கல்பட்டு:

    சென்னையின் நுழைவு வாயிலாக செங்கல்பட்டு ரெயில் நிலையம் உள்ளது. முக்கிய ரெயில் நிறுத்தமாக செயல்படும் இங்கிருந்து சென்னை கடற்கரை வரை புறநகர் மின்சார ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருக்கும்.

    இந்த நிலையில் ரெயில் நிலைய படிக்கட்டுகளிலும், நடைமேடைகளிலும் குரங்குகள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூட்டமாக வரும் குரங்குகள் பயணிகள் கொண்டு செல்லும் பொருளை பிடுங்கி சென்று விடுகின்றன. சில நேரங்களில் பயணிகளை கடிக்க பாய்ந்தும் அச்சுறுத்தியும் வருகிறது.

    இதேபோல் ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகள் மற்றும் டிக்கெட் வினியோகம் செய்யும் இடம், பழைய ரெயில் டிக்கெட் வினியோகம் செய்யும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.

    அவை ஒன்றோடு ஒன்று குரைத்தபடி பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்து சண்டையிடும் போது பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

    எனவே செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரியும் குரங்கு, நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×