என் மலர்
தமிழ்நாடு

X
பேரூராட்சி அலுவலகத்தில் கலெக்டர் அமர்குஸ்வாஹா ஆய்வு செய்த காட்சி.
நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு- வரி தண்டலர் உள்பட 3 பேர் சஸ்பெண்டு
By
Suresh K Jangir5 July 2022 12:43 PM IST

- நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
- கலெக்டர் அமர்குஸ்வாஹா திடீரென பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மீது அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு புகார்கள் கலெக்டர் அமர்குஸ்வாஹாவுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த இன்று காலை கலெக்டர் அமர்குஸ்வாஹா திடீரென பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் வரி தண்டலர் கம்சலா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காவலர் ஜெயபால் மற்றும் அலுவலக உதவியாளர் அனுமந்தன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
X