என் மலர்
தமிழ்நாடு
X
தனது ரத்தத்தால் விஜயகாந்த் படத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய ஓவியர்
ByMaalaimalar30 Dec 2023 11:58 AM IST
- 3 மணி நேரத்தில் அவர் இந்த ஓவியத்தை வரைந்தது குறிப்பிடதக்கது.
- அஞ்சலி நிகழ்வில் அவரது நண்பர்களும் கலந்து கொண்டு விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தினர்.
சீர்காழி:
தே.மு.தி.க. நிறுவன தலைவரும் திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அனைத்து கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அந்த வகையில் சீர்காழி அடுத்த சட்டநாதபுரத்தை சேர்ந்த நுண்கலை நிபுணர் அரவிந்தன் (வயது 24 ) என்பவர் விஜயகாந்தின் உருவப்படத்தை தனது உடலில் இருந்து எடுத்த 3 மில்லி ரத்தத்தால் ஓவியமாக வரைந்து அஞ்சலி செலுத்தினார். 3 மணி நேரத்தில் அவர் இந்த ஓவியத்தை வரைந்தது குறிப்பிடதக்கது.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் அவரது நண்பர்களும் கலந்து கொண்டு விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தினர்.
Next Story
×
X