என் மலர்
தமிழ்நாடு

இலங்கை தமிழர்களுக்கு ரூ.223 கோடி செலவில் 3949 வீடுகள் கட்டப்படும்- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

- 711 தொழில் நிறுவனங்களில் 8 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் செயல்படுத்தப்படும்.
- வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைத்துள்ளோம்.
தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். சரியாக 10 மணிக்கு பட்ஜெட் தொடங்கிய நலையில், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கலில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-
திராவிட மாடல் ஆட்சி வெற்றி நடைபோட்டு வருகிறது. இலக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
மொழிப்போர் தியாகி தாளமுத்து, நடராஜருக்கு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்.
தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும். அம்பேத்கரின் நூல்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும்.
கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும். 711 தொழில் நிறுவனங்களில் 8 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் செயல்படுத்தப்படும்.
இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் ரூ.223 கோடி செலவில் கட்டப்படும். சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் தஞ்சையில் சோழர் அருங்காட்சியம் அமைக்கப்படும்.
மாநிலம் முழுவதும் 25 பகுதிகளில் நாட்டுப்புற பயிற்சி மையம் அமைக்கப்படும். வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.