என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![அ.தி.மு.க. உடன் கூட்டணி அமைக்க பா.ம.க. தீவிரம் அ.தி.மு.க. உடன் கூட்டணி அமைக்க பா.ம.க. தீவிரம்](https://media.maalaimalar.com/h-upload/2024/02/23/2011442-admkpmk.webp)
அ.தி.மு.க. உடன் கூட்டணி அமைக்க பா.ம.க. தீவிரம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமையும் என கூறியுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க கூட்டணி அமைத்துதான் போட்டியிடும் என அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியுள்ளனர்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம், சிவக்குமார், வெங்கடேஷ் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பானது சுமார் 25 நிமிடம் நடைபெற்று உள்ளது.
ஏற்கனவே, தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமையும் என கூறியுள்ளார்.
இதேபோல் பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க கூட்டணி அமைத்துதான் போட்டியிடும் என அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.