search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகனம் நிறுத்த இடம் இல்லாததால் பயணிகள் அவதி
    X

    சென்னை விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகனம் நிறுத்த இடம் இல்லாததால் பயணிகள் அவதி

    • சென்னையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • மாதாந்திர அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே காலை நேரத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த முடியும்.

    ஆலந்தூர்:

    சென்னையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    விரைவு மற்றும் சொகுசு பயணம் என்பதால் பொது மக்கள் மெட்ரோ ரெயில் பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். பயணிகளுக்கு தேவையான வசதிகளை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னை விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    மாதாந்திர அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே காலை நேரத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த முடியும். ஆனால் வழக்கமான பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் வழங்கப் படுவதில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து பயணி ஒருவர் கூறியதாவது:- விமான நிலைய மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு 300 மாதாந்திர பாஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு மேல் வாகனங்களை நிறுத்த சென்றால் இடமில்லை. மாதாந்திர அனுமதி சீட்டிற்காக காத்திருப்போர் பட்டியலில் 300 பேர் உள்ளனர்.

    மேலும் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஸ்மார்ட் கார்டுகள் ஏற்கப்படுவதில்லை. பணமாக செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. தினமும் பயணம் செய்யும் எனக்கு மாதாந்திர அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் பதிவு செய்யுமாறும் கூறி உள்ளனர். ஒரு மோட்டார் சைக்கிளுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூ.75 வசூலிக்கிறார்கள். மாதாந்திர பாஸ் இல்லாமல், வாகன நிறுத்துமிடத்திற்கு மாதம் ரூ.3,500 செலவு செய்ய வேண்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×