என் மலர்
தமிழ்நாடு
X
தனியார் பத்திரிகை புகைப்பட கலைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு- அமைச்சர்கள் நேரில் அஞ்சலி
Byமாலை மலர்2 Jan 2023 4:27 PM IST
- சீனிவாசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- மாரடைப்பால் உயிரிழந்த சீனிவாசன் உடலுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. வைபவ நிகழ்ச்சி தொடர்பான புகைப்படத்தை எடுத்து வெளியிடுவதற்காக ஆங்கில பத்திரிகை புகைப்பட கலைஞரான சீனிவாசன் என்பவர் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சீனிவாசன் வழியிலேயே உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த சீனிவாசன் உடலுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Next Story
×
X