search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவண்ணாமலை அருகே அக்னி கலசம் அகற்றம்: பா.ம.க-வன்னியர் சங்கத்தினர் பேரணி
    X

    திருவண்ணாமலை அருகே அக்னி கலசம் அகற்றம்: பா.ம.க-வன்னியர் சங்கத்தினர் பேரணி

    • தமிழ்நாட்டில் இருந்து பல பகுதிகளில் இருந்தும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வந்தனர்.
    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அடுத்த நாயுடு மங்கலத்தில் பாட்டாளி மக்கள் சார்பில் கடந்த 1989-ம் ஆண்டு அக்னி கலசம் வைக்கப்பட்டது. இந்த கலசத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பஸ் நிலையம் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தால் அக்னி கலசம் அகற்றப்பட்டது.

    இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பஸ் நிலைய கட்டுமான பணி நிறைவு பெற்றவுடன் மீண்டும் அதே இடத்தில் அக்னி குண்டம் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் சொன்னபடி அக்னி குண்டம் அமைக்கப்படாததால் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் அக்னி குண்டம் அமைக்கப்பட்டது.

    மாவட்ட நிர்வாகத்தால் அக்னி குண்டம் அகற்றப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏந்தல் பக்தவச்சலம் தலைமையில் 2-வது முறையாக புதிய அக்னி குண்டம் அமைக்கப்பட்டது.

    இதை வருவாய் துறை மற்றும் போலீசார் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாட்டாளி மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி தலைமையில் இன்று காலை திருவண்ணாமலை அண்ணா நுழைவுவாயில் அருகில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் பேரணியாக நாயுடுமங்கலம் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாட்டில் இருந்து பல பகுதிகளில் இருந்தும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வந்தனர். இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    இந்த பேரணியால் திருவண்ணாமலை முதல் நாயுடுமங்கலம் வரை உள்ள பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியது.

    Next Story
    ×