என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி... விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி...](https://media.maalaimalar.com/h-upload/2023/12/28/1997905-edappadi.webp)
விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி...
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தே.மு.தி.க. அலுவலகம் முன்பு உள்ள கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
- விஜயகாந்த் உடல் நாளை மாலை 4.45 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
சென்னை:
மறைந்த நடிகரும், தே.மு.தி.க. நிறுவனருமான விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.30 மணியில் இருந்து திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் உடலுக்கு முதல் ஆளாக வந்து நடிகர் கவுண்டமணி அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், வி.கே. சசிகலா, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, நடிகர்கள் மன்சூர் அலிகான், பிரபு, சூரி, ஆனந்த் ராஜ், இயக்குனர்கள் டி.ராஜேந்தர், விக்ரமன், ஏ.ஆர்.முருகதாஸ், பேரரசு, கவிஞர் வைரமுத்து ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கோயம்பேடு பகுதியை பொதுமக்கள் வெள்ளத்தால் நிரம்பியுள்ளது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தே.மு.தி.க. அலுவலகம் முன்பு உள்ள கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
விஜயகாந்த் உடல் நாளை மாலை 4.45 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
#WATCH | Chennai: Actor Prabhu pays tribute to DMDK chief Captain Vijayakanth, who passed away earlier today pic.twitter.com/IWhUPF3IPa
— ANI (@ANI) December 28, 2023
#WATCH | Chennai: AIADMK expelled leader VK Sasikala pays tribute to DMDK captain Vijaykanth who passed away earlier today pic.twitter.com/tfIkI1ogTP
— ANI (@ANI) December 28, 2023
#WATCH | Chennai: Telangana Governor Tamilisai Soundararajan arrives at the DMDK office to pay tribute to DMDK chief Captain Vijayakanth, who passed away in the morning today. pic.twitter.com/poFtpiE1G5
— ANI (@ANI) December 28, 2023