என் மலர்
தமிழ்நாடு
பிரபாகரன் பிறந்தநாள் விழா: சீமான் நாளை பம்மலில் பேசுகிறார்
- "தமிழர் எழுச்சி நாள்" எனும் தலைப்பில் நடைபெறுகிறது.
- பூவன் பிரதாப், வீரத்தமிழர் வேதநாயகம் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதி சார்பில் சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பம்மல் எல்.சி.திருமண மண்டபத்தில் நாளை (26-ந் தேதி) காலை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா "தமிழர் எழுச்சி நாள்" எனும் தலைப்பில் நடை பெறுகிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விழாவில் பங்கேற்று பேசுகிறார்.
மண்டல செயலாளர் ஈரா.மகேந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் இனியன் ஜான், மாவட்டச் செயலாளர்நாகநாதன், மாவட்டத் தலைவர் மகேந்திரவர்மன், பொருளாளர் மாரிமுத்து, ஆறுமுகம், சந்திரபோஸ், முரளி, பல்லாவரம் சட்ட மன்றத் தொகுதிச் செயலாளர் கோபி.தேவா, தென்றல் அரசு, அனகை இரா.பாலாஜி, கரு.அருண்குமார், ஆ.சிராஜ், செல்வகணபதி, ராஜேஷ், ராம.செல்வம், மார்க் ஆல்பர்ட், ப.மகேந்திரன். பம்மல் பகுதிச் செய லாளர் ரவி, சார்லஸ், வெற்றிவேல், பிரவீன், பிரபு, தயாளன், அறிவுமதி, பாஸ்கர், திருநீர்மலை ரமேஷ். அனகாபுத்தூர் பகுதித் தலைவர் செல்வம், ராஜா, பொன்ராஜ், மகளிர் அணி நேசமணிஅம்மாள், சரளா, இளைஞர் அணி ராம்குமார், ராஜா விநாயக், பூவன் பிரதாப், வீரத்தமிழர் வேதநாயகம் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
தாம்பரம், ஆலந்தூர் மதுரவாயல், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களும் பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றகிறார்கள்.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை விழா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.