search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள 20 மாவட்டங்கள்...
    X

    அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள 20 மாவட்டங்கள்...

    • நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது லேசான மழையும் பெய்து வருகிறது.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று முதல் வானம் மேகமூட்டத்துடனும், சில நேரங்களில் லேசான மழையும் பெய்தது.

    இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

    மேலும், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இதனால் சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது லேசான மழையும் பெய்து வருகிறது.

    Next Story
    ×