என் மலர்
தமிழ்நாடு

பணிக்காலத்தில் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ.1,500 கோடி பணப்பலன்கள் வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் தகவல்

- கொரோனா காலத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது.
- போக்கு வரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புறநகர் கிளை வளாகத்தில் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் சார்பில் தருமபுரி மண்டலத்தில் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா, ரத்ததான முகாம் நடந்தது.
இதனை கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-
சில மாநிலங்களில் போக்குவரத்து துறையில் பணியாற்ற கூடிய ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் இல்லை.
இதற்கு காரணம் முதலமைச்சர் செயல்படுத்தி உள்ள மகளிருக்கு கட்டண மில்லா பயணத் திட்டம் தான்.
இந்த திட்டத்திற்காக அரசு வழங்கும் நிதியின் மூலம் போக்குவரத்து துறை வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
கொரோனா காலத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது.
பணிக்காலத்தில் இறந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பணப்பலன்கள் கடந்த 2 காலத்தில் ரூ.1500 கோடியையும், 3 தவணைகளாக வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள தொகையை இன்னும் 4 மாதங்களுக்குள் அவர்களுக்கு வழங்கப்படும். பொதுமக்களின் பஸ் பயன்பாடு அதிகமான நிலையில் ரூ.500 கோடி மதிப்பில் 1000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்படும், 1500 பழைய பஸ்கள் புதுப்பிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படி ரூ.14 கோடியே 90 லட்சம் மதிப்பில் புதுப்பிக் கப்பட்ட 100 மஞ்சள் நிற பஸ்கள் பயன் பாட்டிற்கு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களை பாதுகாக்கும் அரசாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.