என் மலர்
தமிழ்நாடு

விதிகளை மீறி பட்டாசு தயாரித்து வைக்ப்பட்ட குடோனுக்கு போலீசார் சீல் வைத்தனர்
சாத்தூர் அருகே விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட ரூ. 5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

- நாடு முழுவதிலும் வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
- குடோன் உரிமையாளர் வடிவேலு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சாத்தூர்:
நாடு முழுவதிலும் வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு தயாரிப்பவர்களை கண்டறிய மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டியில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான குடோனில் விதிகளை மீறி பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பெரிய கொல்லப்பட்டியில் உள்ள குடோனின் இருக்கன்குடி போலீசார் தீடீர் ஆய்வு நடத்தினர். அப்போது சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த குமரன் (வயது 42) என்பவர் மொத்தமாக பட்டாசுகளை வாங்கி வைத்து விதிகளை மீறி பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரித்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பெரிய கொல்லப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் குடோன் உரிமையாளர் வடிவேல் மற்றும் பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரித்த குமரன் என்பவர் மீது இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விதிகளை மீறி பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரித்த குமரன் என்பவரை கைது செய்தனர். குடோன் உரிமையாளர் வடிவேலு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் விதிகளை மீறி பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரிக்க பயன்படுத்திய குடோனுக்கு சீல் வைத்த போலீசார் குடோனில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.