என் மலர்
தமிழ்நாடு
செங்கம் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதி 3 வாலிபர்கள் பலி
- வழியாக சென்றவர்கள் செங்கம் போலீசாருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
- விபத்து குறித்து செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செங்கம்:
திருப்பத்தூர் மாவட்டம் காக்கனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் யோகேஷ் (வயது 25), ஆகாஷ் (20), கவுதம மணிகண்டன்(28).
இவர்கள் 3 பேரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காக்கனாம்பாளையத்திலிருந்து திருச்சி செல்வதற்காக காரில் புறப்பட்டனர்.
திண்டிவனத்தில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு பெங்களூர் நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது.
செங்கம் புறவழிச் சாலையில் லாரியும், காரும் வரும்போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த யோகேஷ், ஆகாஷ், கவுதம மணிகண்டன் ஆகியோர் உடல் நசுங்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் செங்கம் போலீசாருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் நொறுங்கி இருந்த காரிலிருந்து 3 வாலிபர்களின் உடல்களை மீட்டனர்.
மேலும் போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.