search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மார்ச் 20ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
    X

    மார்ச் 20ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

    • எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யப்படும்.
    • மார்ச் 28ம் தேதி முன்பண மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும்.

    தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மார்ச் 20ம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

    20230-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

    செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு மேலும் கூறியதாவது:-

    எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யப்படும்.

    அதிமுக இருக்கை விவகாரத்தில் ஏற்கனே முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் யார் எங்கு அமர வேண்டும் என்பது என் அதிகாரத்திற்குப்பட்டது, அதுகுறித்து ஏற்கனவே அறிவித்துவிட்டோம்.

    மார்ச் 28ம் தேதி முன்பண மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×