என் மலர்
தமிழ்நாடு
அமைச்சருடன் 1 மணி நேர பேச்சுவார்த்தை.. ஆசிரியர் சங்க போராட்டம் திடீர் வாபஸ்..
- போராட்டத்திற்கு பதிலாக விளக்க கூட்டம் நடைபெற இருக்கிறது.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவித்தல் என்பன உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில் சென்னையில் நாளை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நாளை நடைபெற இருந்த ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. போராட்டத்திற்கு பதிலாக விளக்க கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
போராட்டம் நடைபெற இருந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சருடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, 11 கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதால் போராட்டம் இல்லை என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
போராட்டத்திற்கு பதிலாக சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நாளை விளக்க கூட்டம் நடைபெறும் என்று ஆசிரியர் சங்கங்களின் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் சேகர் தெரிவித்து உள்ளார்.