என் மலர்
தமிழ்நாடு
X
வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்- தமிழிசை பேட்டி
BySuresh K Jangir5 March 2023 11:45 AM IST (Updated: 5 March 2023 11:52 AM IST)
- காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்ற வார்த்தை மிகவும் பிரபலமானது.
- தமிழகத்தில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர்களின் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
கன்னியாகுமரி:
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கன்னியாகுமரி பகவதிஅம்மன்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்ற வார்த்தை மிகவும் பிரபலமானது. பல வெளி மாநிலத்தவர்கள் நம்மை நம்பி வேலைதேடி தமிழகத்துக்கு வந்து உள்ளனர்.
தமிழர்களும் பல்வேறு மாநிலங்களில் பணி புரிகின்றனர். அதனால் தவறான வதந்திகளை பரப்ப கூடாது. நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர்களின் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்கள் பிரச்சினைக்கு வழி வகுக்க கூடாது. சமூகவலை தளங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
X