என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![6 பேர் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது- ரவிச்சந்திரன் தாயார் பேட்டி 6 பேர் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது- ரவிச்சந்திரன் தாயார் பேட்டி](https://media.maalaimalar.com/h-upload/2022/11/12/1790629-vilathikulam.jpg)
6 பேர் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது- ரவிச்சந்திரன் தாயார் பேட்டி
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பன் நாயக்கன்பட்டி ஆகும்.
- ரவிச்சந்திரன் எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
விளாத்திகுளம்:
முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது.
இதைத்தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி உள்ளிட்ட மற்ற 6 பேரும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் எஞ்சிய 6 பேரையும் நேற்று சுப்ரீக் கோர்ட் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பன் நாயக்கன்பட்டி ஆகும்.
இவர் தற்போது பரோலில் இருந்து வருகிறார். அவர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விடுதலை குறித்து ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-
பல ஆண்டுகள் சிறைக்கு பின்னர் ரவிச்சந்திரன் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 7 பேர் விடுதலைக்காக தமிழக கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தமிழக அரசுதான் நடவடிக்கை எடுத்தது. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம்.
ரவிச்சந்திரன் எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.